லேபிள்கள்

26.11.15

சென்னை பல்கலையில் நவ., 28 வரை தேர்வு ஒத்திவைப்பு

மழை எச்சரிக்கையால் நவ., 28 வரை, சென்னை பல்கலை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சட்ட பல்கலையில், இன்று முதல் தேர்வுகள்துவங்குகின்றன.மழை, வெள்ளப் பிரச்னையால், இரண்டு வாரங்களாக, சென்னை பல்கலையின் தேர்வுகள் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.


மூன்று நாட்களுக்குமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் அறிவித்துள்ளதால், நவ., 28 வரை, தேர்வுகளை ரத்து செய்து சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன் அறிவித்து உள்ளார்.தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகளில், இன்று முதல் வகுப்புகள் துவங்கும்; தேர்வுகள் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக