லேபிள்கள்

22.11.15

ஏழாவது ஊதியக் குழு அறிக்கையை எதிர்த்து விரைவில் போராட்டம்

தஞ்சாவூரில் ஏழாவது ஊதியக் குழு அறிக்கையை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்துவது என எஸ்.ஆர்.இ.எஸ். (தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம்) முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் எஸ்.ஆர்.இ.எஸ். மாவட்டக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


ஏழாவது ஊதியக் குழுத் தலைவர் ஏ.கே. மாத்தூர் அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கியது ஏற்கத்தக்கதல்ல. நியாயமாக ஊழியர்களிடம் வழங்கப்பட வேண்டும். இந்த அறிக்கையில் 52 படிகள் நீக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 26,000 என நிர்ணயிக்கப்படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படவில்லை.   காலிப் பணியிடங்களை நிரப்ப வழிவகை இல்லை. எனவே, இதைக் கண்டித்து தஞ்சாவூரில் விரைவில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. எஸ்.ஆர்.இ.எஸ். தஞ்சாவூர் கிளைத் தலைவர் ஜெ. அசோக்ராஜன் தலைமை வகித்தார். ஐ.என்.டி.யு.சி. மாவட்டத் தலைவர் நாஞ்சி கி. வரதராசன், எஸ்.ஆர்.இ.எஸ். கிளைத் தலைவர் கே. தங்கராஜ் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக