லேபிள்கள்

26.11.15

அரசு மகளிர் பள்ளியில் மொபைல் போன்கள் பறிமுதல்

கரூர் மாவட்டம், குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கடந்த வாரம், பிளஸ் 1 படிக்கும் நான்கு மாணவியர் மாயமாகி பரபரப்பை ஏற்படுத்தினர்.
நேற்று முன்தினம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவியரிடம் ஆசிரியர்கள் சோதனை நடத்தினர்.


அப்போது, மாணவியரிடமிருந்து, 25க்கும் மேற்பட்ட மொபைல்போன்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.மாணவியரின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, பள்ளிக்கு வரும்போது மொபைல் போன் கொடுக்கக்கூடாது எனவும், மீறி கொண்டு வந்தால், மாணவியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக