லேபிள்கள்

7.8.16

மருத்துவம் சார் பட்டப்படிப்பு 18,000 பேர் விண்ணப்பம்

பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் உள்ள, 7,745 இடங்களுக்கு, 18 ஆயிரத்து, 324 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில், பாரா மெடிக்கல் என்ற,
பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், மூன்று வித படிப்புகளுக்கு, 7,190 இடங்கள் என, 7,745 இடங்கள் உள்ளன. 20 ஆயிரத்து, 247 பேர் விண்ணப்பங்கள் பெற்றிருந்தனர். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, நேற்று முன்தினம் கடைசி நாள். மொத்தம், 18 ஆயிரத்து, 324 பேர் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 'அடுத்த வாரம் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும்; இம்மாத இறுதியில் கலந்தாய்வு நடத்தப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக