லேபிள்கள்

12.8.16

நாளை ஆசிரியர்கள் கவுன்சிலிங் : போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு

அரசு தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, நாளை, கட்டாய இடமாற்றம் நடக்கிறது.
இதில், பிரச்னைகளை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், 3ம் தேதி முதல் நடந்து வருகிறது. 

இதில் முக்கிய கட்டமான, பணி நிரவல் என்ற கட்டாய இடமாற்றம், நாளை துவங்குகிறது. அனைத்து மாவட்டங்களிலும், நாளையும், நாளை மறுதினமும், பணி நிரவல் கவுன்சிலிங் நடக்கிறது.

தொடக்க பள்ளிகளில், ஆசிரியர் - மாணவர் விகிதத்திற்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களை, தேவைப்படும்பள்ளிக்கு மாற்றுவர்.இந்த கட்டாய இடமாற்றத்தில், ஒவ்வொரு ஆண்டும், பல தில்லுமுல்லுகள் நடப்பது உண்டு. அதனால், பல இடங்களில் போராட்டங்கள் வெடிக்கும். இந்த ஆண்டு, எந்த பிரச்னைக்கும் வழியின்றி, பணி நிரவலை நடத்தி முடிக்க, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக