லேபிள்கள்

8.8.16

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி - ஆக.8,9-களில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள்
மற்றும் கணினி ஆசிரியர்கள், உள்ளிட்ட அனைத்து நிலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2016-17-ம் ஆண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, ஏற்கெனவே மாறுதல் கோரி இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் ஆக.8, 9-ம் தேதிகளில் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அன்று காலை 10 மணிக்கு ஆட்சியரகத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு சென்று இணையதள கலந்தாய்வில் பங்கேற்கலாம் என ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக