லேபிள்கள்

8.8.16

அரசு பள்ளிகளுக்கு உளவியல் ஆலோசகர்கள்

அரசு பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பது உளவியல்ஆலோசகர்களை, அரசு நியமித்துள்ளது.
மது அருந்துதல், மாணவியரை கிண்டல் செய்தல், பஸ்களில் கோஷ்டி மோதலில் ஈடுபடுதல் போன்ற, அரசு பள்ளி மாணவர்களின் தவறான பழக்கங்கள், சமீபகாலமாக அதிகரித்துள்ளன.

இதை தவிர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும்,அரசு பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பதுஉளவியல் ஆலோசகர்களை, பள்ளிக்கல்வித் துறை நியமித்துள்ளது. மாவட்ட கல்விஅதிகாரிகள், தங்கள்கட்டுப்பாட்டில் உள்ளபள்ளிகளில், இந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக