ஆதார் இணைப்பு பணிகள், விவர சேகரிப்பு பணிகள் நடப்பதால்,விரை வில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதம் மற்றும் பதி லுரை முடிவில், திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, ‘கடந்த 2012-ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அறிவித்தீர்கள்.
அந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது’ என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.பெஞ்சமின் பேசுகையில், ‘தற் போது மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களின் ஆதார் எண்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 90 லட்சம் மாணவர்களின் விவரங்கள் சேகரிக் கப்பட்டுள்ளன. விரைவில் இவர் களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப் படும்’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக