அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனமான, எய்ம்ஸ் கல்லுாரிகளில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு, பிப்., 23 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு கட்டுப்பாட்டில், டில்லி உட்பட, நாடு முழுவதும் ஏழு இடங்களில், எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டிற்கு, மே, 28ல், 'ஆன்லைன்' வழியில் நுழைவு தேர்வு நடக்கும் என, எய்ம்ஸ் அறிவித்து உள்ளது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, ஜன., 24ல் துவங்கியது. பிப்., 23 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை, http://www.aiimsexams.org/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக