லேபிள்கள்

4.2.17

வேலைவாய்ப்பு அலுவலகம் சாந்தோமில் இருந்து கிண்டிக்கு மாற்றம்

சென்னை சாந்தோமில் இயங்கி வந்த மண்டல இணை இயக்குநர் வேலைவாய்ப்பு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக
மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

    சென்னை சாந்தோமில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மாளிகையில் மண்டல இணை இயக்குநர் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்தது.
இந்நிலையில், சாந்தோமில் இயங்கி வந்த இந்த வேலைவாய்ப்பு அலுவலகம் கிண்டிக்கு மாற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

      கிண்டி தொழிற்பேட்டை அருகில் அரசினர் பெண்கள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலவலக கட்டிடத்தின் தரை தளத்திற்கு மாற்றப்பட உள்ளது.

  01.02.2017 முதல்(நாளை) இந்த அலுவலக மாற்றம் நடைமுறைக்கு வருவதாகவும், புதிய முகவரியில் இனிமேல் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக