லேபிள்கள்

31.1.17

நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அவர்களின் அறிக்கை

நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின்  மாநில பொதுச்செயலாளர் அவர்களின் அறிக்கை;
************************************************************************************************
தமிழகத்தில் 24 மருத்துவ கல்லூரிகள் உள்ளன.இந்த கல்லூரிகளில் தமிழகஅரசு தற்போது பின்பற்றி வரும் மாணவர் சேர்க்கை மூலம் மருத்துவம் படித்தவர்கள் தற்போது சிறப்பாக மருத்துவ சேவை புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நீட்தேர்வு மூலம் மருத்துவகல்வி சேர்க்கை என்பது தமிழக மக்களுக்கு, குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு மருத்துவ கல்வி உரிமையை மறுப்பதோடு, தமிழக அரசு தனது நிதியில் தனது மக்களுக்கு வழங்கி வரும் தரமான மருத்துவ கல்வியை மறுப்பதோடு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் அமையும்.
மேலும் நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி மையங்கள் நாடெங்கும் புற்றீசல்போல பெருகி, அதன்மூலம் சகல பிரிவு மக்களையும், மாணவர்களையும் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடித்திட ஒர் புதிய சந்தையை ஏற்படுத்தி கொடுத்திட உதவும் சூழ்நிலை உருவாகும்..
எனவே அனைத்து பிரிவு மக்களும் மருத்துவ கல்வி பெற உதவும் வகையில் நீட்தேர்வினை நடத்திடும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தமிழக அரசினை தொடர்ந்து வலியுறுத்தியது.
மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்கள் சமுதாயத்தில் பின்தங்கிய மக்கள் மருத்துவ கல்வி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து நீட்தேர்வினை எதிர்த்து வந்தார்..
இன்று தமிழக அரசு மறைந்த தமிழக முதல்வர் அவர்களின் கனவினை நனவாக்கும் வகையில் நீட்தேர்வுக்கு எதிராக சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்ற உள்ளது...
இதற்கஉ தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
முழுஆதரவு தருவதோடு, தமிழக அரசிற்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக