லேபிள்கள்

2.2.17

15 வகையான நுழைவு தேர்வுகள் : இனி தேசிய தேர்வு முகமை நடத்தும்

உயர் கல்வியில் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை, யு.ஜி.சி.,- - ஐ.ஐ.டி., - இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆர்க்கிடெக்ட் கவுன்சில் நடத்தி வருகின்றன. இனி, தேசிய தேர்வு முகமை, இந்த தேர்வுகளை நடத்தும் என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள நுழைவுத் தேர்வுகள் விபரம்:
ஜே.இ.இ., - ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்புக்கான, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு

'நீட்' - எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பு களுக்கான, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு
'நெட்' - பேராசிரியர்கள் பணியில் சேரவும், கல்லுாரி, பல்கலைகளில் உதவித் தொகையுடன், முழு நேர ஆராய்ச்சி படிப்பில் சேரவும் நடத்தப்படும், தேசிய தகுதி தேர்வு
'சிடெட்' - சி.பி.எஸ்.இ., மற்றும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர்வதற்கான, மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வு
'கேட்' - ஐ.ஐ.டி., உட்பட பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில், எம்.இ., - எம்.டெக்., சேர்வதற்கான நுழைவுத் தேர்வு
'நாட்டா' - பி.ஆர்க்., படிப்பில் சேர்வதற்கான ஆர்க்கிடெக்ட் கவுன்சில் நடத்தும், தேசிய திறனறி தேர்வு
நவோதயா நுழைவுத் தேர்வு - ஜவஹர்நவோதயா பள்ளிகளில், ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் சேர்வதற்கான, நுழைவுத் தேர்வு
'சிமேட்' - மேலாண் படிப்பில் சேர்வதற்கான, பொது திறனறி தேர்வு
'ஜீபாட்' - பார்மசி படிப்பில் சேர்வதற்கான திறனறி தேர்வு
'நிப்ட்' - தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில், பட்டப் படிப்பு படிக்க நடத்தப்படும் தேர்வு
'கிளாட்' - மத்திய அரசின் சட்ட கல்லுாரிகளில் சேர்வதற்கான, பொது நுழைவுத் தேர்வு
எய்ம்ஸ் - எய்ம்ஸ்மருத்துவக் கல்லுாரி நுழைவுத் தேர்வு
ஜிப்மர் - ஜவஹர்லால் நேரு மருத்துவமனை, மருத்துவக் கல்லுாரி நுழைவுத் தேர்வு
'ஜாம்' - ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனங்களில், எம்.எஸ்சி., படிப்பில்சேர்வதற்கான, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு
'நிம்செட்' - என்.ஐ.டி., தேசிய உயர் கல்வி நிறுவனத்தில், எம்.சி.ஏ., படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக