லேபிள்கள்

4.2.17

'நீட்' தேர்வு எழுத புதிய சலுகை

மூன்று முறை தேர்வு எழுதியவர்களுக்கு, 'நீட்' எழுதுவதற்கான தடை விலக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இணையதளத்தின், 'கோடிங்' மாற்றாததால், விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கட்டாயம்:

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வு, மே 7ல் நடக்கும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஜன., 31ல் வெளியானது. இந்த தேர்வில், கடந்த மூன்று முறை எழுதியவர்கள், விண்ணப்பிக்க முடியாது என, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், 'நீட்' தேர்வு முழுமையாக, இந்த ஆண்டுதான் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், மூன்று வருட நிபந்தனையை தளர்த்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக