லேபிள்கள்

2.2.17

செய்தி தமிழ்நாடு நடப்பு ஆண்டில் 28 தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சென்னை: 'தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 3,781 பணியிடங்களை நிரப்ப, இந்தாண்டு, 28 தேர்வுகள் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 




28 தேர்வுகள்:

நடப்பு கல்வி ஆண்டுக்கான, தோராய தேர்வு அட்டவணை பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில், 28 தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதில், எட்டு தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவை; 20 தேர்வுகள் புதியவை. இதன் மூலம், 28 வகை பணிகளில், 3,781 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 494 வி.ஏ.ஓ., பணியிடங்கள் மற்றும் குரூப் 2 தேர்வு ஆகியவற்றின் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக