லேபிள்கள்

30.4.17

உறைவிட பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் 'ஜரூர்'

கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, அரசு உத்தரவிட்டாலும், உறைவிட பள்ளிகளில், நாள் முழுவதும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தடை ஏதுமில்லைதமிழகத்தில், கோடை வெயில் உக்கிரமாக உள்ளது. இதனால், மாணவர்கள், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, கல்வித் துறை நடவடிக்கை எடுத்து
உள்ளது. இதன்படி, தொடக்க பள்ளிகளுக்கான தேர்வுகள், ஒரு வாரத்திற்கு முன் முடிக்கப்பட்டு, விடுமுறை அறிவிக்கப்பட்டது. 'எந்த பள்ளியிலும், கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. 


ஆனாலும், பல மெட்ரிக் பள்ளிகளிலும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள, உறைவிட பள்ளிகளிலும், சிறப்பு வகுப்புகள் ஜரூராக நடந்து வருகின்றன.
பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே மாணவர்கள் தங்கி படிப்பதால், அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த தடை ஏதும் இல்லை. ஜூன் இறுதிக்குள்அதிகாரிகளும், இந்த பள்ளிகளின் பல அடி உயர நுழைவாயில் கேட்டை திறந்து, உள்ளே செல்ல முடியாது. எனவே, எந்தவித தடையுமின்றி, சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன. ஜூன் மாதத்திற்குள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், நான்கில் 
ஒரு பங்கு பாடங்களை நடத்தி விட முடிவு செய்துள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக