லேபிள்கள்

3.5.17

பள்ளி வாகனங்கள் ஆய்வு மே 30க்குள் அறிக்கை

'பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து, வரும், 30க்குள் அறிக்கை அளிக்க வேண்டும்' என, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பள்ளி வாகனங்களின் பாதுகாப்பை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உறுதி செய்த பின்னே, அந்த வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுகிறது. குறைபாடுகள் உள்ள பள்ளி வாகனங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படுகிறது. 

தற்போது, தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆண்டு பொதுத் தேர்வுகள் முடிந்ததை அடுத்து, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்தவுடன், வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதற்கு முன்னதாக, பள்ளி வாகனங்களை தணிக்கை செய்து, வரும், 30க்குள் அறிக்கை அளிக்குமாறு, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

இதையடுத்து, அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான குழு, பள்ளி வாகனத்தின் பதிவுச் சான்று, ஓட்டுனர் உரிமம், அவரது அனுபவம், காப்புச் சான்று, புகை சான்று, அனுமதிச் சான்று உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகிறது. இதில், குறைபாடுகள் கண்டறியப்பட்டால், பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து
செய்யப்படும். அதன் அறிக்கையை, போக்குவரத்து அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக