வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கே,
பதக்கமும், பரிசும் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில், மதிப்பெண் அடிப்படையில், மாநில அளவில், 'ரேங்க்' வழங்கப்படும்.
மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்கள் பெறுவோருக்கு, பரிசு, ஊக்கத்தொகை, சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வில், ரேங்க் பெறும் மாணவர்களுக்கு, முதல்வர் பரிசு வழங்கி பாராட்டுவார். தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டுமே, இந்த பரிசு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 2011ல் அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதனால், பரிசு மற்றும் பதக்கத்துக்கு, தனியார் பள்ளி மாணவர்களும், ஆங்கில வழி மாணவர்களும், அதிக அளவில் தேர்வாகினர். அரசு பள்ளியில், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள், பெரும்பாலும், மாநில, மாவட்ட ரேங்க் பெறுவதில்லை. மாநில அரசின் பரிசும், பதக்கமும், தனியார் பள்ளி மாணவர்களுக்கே கிடைக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த முறைக்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன. அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழி மாணவர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல், மாநில, மாவட்ட ரேங்குக்கான பரிசுகளை, அரசு பள்ளியிலும், தமிழ் வழியிலும் படிக்கும் மாணவர்களுக்கே வழங்கலாம் என, அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
அரசு பள்ளியில், தமிழ் வழி அல்லது ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும், பரிசு வழங்குவதா; அரசு பள்ளியிலோ, தனியார் பள்ளியிலோ, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பரிசு தருவதா என, ஆய்வுகள் நடந்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக