லேபிள்கள்

3.5.17

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில்ஊதிய நீட்டிப்பு ஆணை இல்லாமல் 8 ஆயிரம் ஆசிரியர்கள் பரிதவிப்பு

தமிழகம் முழுவதும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் 6,742 பட்டதாரி ஆசிரியர்கள், 1,590 முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு மாதம்தோறும் ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கப்படும்.
அதனை கருவூலங்களில் சமர்ப்பித்த பின்பே சம்பளம் வழங்கப்படும். இந்த முறையால் ஆணை மற்றும் ஊதியம் வழங்குதலில் சில சமயங்களில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் முறையாக சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரலில் ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி சம்பளம் பெறுகின்றனர்.இந்த ஆண்டுக்கான ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கப்படாததால், ஏப்ரல் மாத சம்பளம் ஆசிரியர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் 8,332 ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். உட்கட்சி பிரச்னையால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க இயலாமல் உள்ளதே இதற்கு காரணம் எனத் தெரிகிறது. உடனடியாக ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக