லேபிள்கள்

30.5.17

10ம் வகுப்பு துணை தேர்வு ஜூன் 28ல் துவக்கம்

'பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், 28ல் துவங்கும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 


இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்ச்சில் நடந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்காதவர்களுக்கும், தேர்ச்சி பெறாதவர்களுக்கும், சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், 28ல் துவங்கி, ஜூலை, 6 வரை நடக்கும். விண்ணப்பிக்க விரும்புவோர், பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களுக்கு சென்று, மே, 31 முதல், ஜூன், 3 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தனியார் இணைய தள மையங்களில் விண்ணப்பிக்க முடியாது.

தேர்வு நாட்கள் : ஜூன் 28, தமிழ் முதல் தாள்; 29ல், தமிழ் இரண்டாம் தாள்; 30ல், ஆங்கிலம் முதல் தாள்; ஜூலை, 1ல், ஆங்கிலம் இரண்டாம் தாள்; 3ல், கணிதம்; 4ல், அறிவியல்; 5ல், சமூக அறிவியல்; ஜூலை, 6ல் விருப்ப மொழி பாடம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக