கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
படிப்புகளில் இடங்கள் எவ்வளவு?: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏவி) படிப்புக்கு 320 இடங்கள், உணவுத் தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்கு 20 இடங்கள், கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 380 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
இணையதளத்தில் விண்ணப்பம்: இந்தப் படிப்புகளுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் மே 15-ஆம் தேதி முதல் தொடங்கின.
விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்து, பின்பு அதனை பிரதி எடுத்து பல்கலைக்கழகத்தின் சேர்க்கைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். இந்தப் படிப்புகளுக்கு இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு ஜூன் 1-ஆம் தேதி கடைசி நாள் என்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதற்கு ஜூன் 7-ஆம் தேதி கடைசி நாள் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜூன் 5, ஜூன் 12: விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு ஜூன் 5-ஆம் தேதி மாலை 6 மணி வரையும், பதிவு செய்த விண்ணப்பங்களைப் பிரதி எடுத்து தேர்வுக் குழுவுக்கு அனுப்புவதற்கு ஜூன் 12-ஆம் தேதி கடைசி நாள் எனவும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக