தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை கல்வியியல் (பி.எட்.), சிறப்பு கல்வியியல் (பி.எட்.–ஸ்பெஷல்) பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் (எம்.எட்) பட்டங்களுக்கான தேர்வுகள்
நாளை (திங்கட்கிழமை) முதல் ஜூன் 12–ந் தேதி வரை சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி உள்பட 95 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளன.
இதில் பி.எட். முதலாம் ஆண்டில் 55 ஆயிரம் மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் 52 ஆயிரம் மாணவர்களும், எம்.எட். முதலாம் ஆண்டில் 5 ஆயிரம் மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் 4 ஆயிரத்து 400 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு நுழைவுச்சீட்டினை இணையதளம் வழியாக அந்தந்த கல்லூரியில் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக