லேபிள்கள்

2.6.17

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய சேவை கட்டணங்கள் அமலுக்கு வந்தது

பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு சேவைகளுக்கு அறிவித்துள்ள புதிய கட்டண விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன.
இதுவரை இலவமாக அளிக்கப்பட்டு வந்த ஐஎம்பிஎஸ் எனப்படும் உடனடி பணபரிமாற்ற சேவைக்கு இனிமேல் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஒரு லட்சம் ரூபாய் வரை 5 ரூபாய் சேவை வரி வசூலிக்கப்படும். 2 லட்சம் ரூபாய் வரை 15 ரூபாய், 5 லட்சம் ரூபாய் வரை 25 ரூபாய் என கட்டணம் இருக்கும்.அதேபோல் ஏ.டி.எம். கார்டுகளை பொறுத்தவரை ரூபே கார்டுகள் மட்டுமே இலவசம்.

இதர கார்டுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஏ.டி.எம்.களில் மாதந்தோறும் 4 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் பணம் எடுக்க முடியும், அதற்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு சொந்த கணக்கு இருக்கும் கிளையில் 50 ரூபாயும், ஏ.டி.எம்.ல் 10 ரூபாயும், இதர வங்கிகளின் ஏ.டி.எம்.களில் தலா 20 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். 10 காசோலைகள் உள்ள புத்தகத்திற்கு 30 ரூபாயும், 25 காசோலைகளுக்கு 75 ரூபாயும், 50 காசோலை உள்ள புத்தகத்திற்கு 150 ரூபாயும்கட்டணமாக செலுத்த வேண்டும்.இவற்றிற்கு சேவை வரியும் உண்டு. அதேபோன்று ஸ்டேட் வங்கி யின் வட்டி எனப்படும் ஸ்மார்ட் போன் செயலில் நடத்தும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக