பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் விதிகளை மீறும் பள்ளிகளில், குழு அமைத்து சோதனை நடத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இதையடுத்து, மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்ப, பிளஸ் 1ல், சேர்க்கப்படுவர். பிளஸ் ௧ சேர்க்கையே, மாணவர்களின் உயர்கல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. மருத்துவம் படிக்க, அறிவியல் பாடப்பிரிவு; இன்ஜி., படிக்க, கணித பாடப்பிரிவு; ஐ.டி., துறைக்கு படிக்க, கம்யூ., சயின்ஸ் பாடப்பிரிவு என, உயர்கல்வியை திட்டமிட்டு, பிளஸ் 1 பாடப்பிரிவு களை, மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். 'பிளஸ் 1 சேர்க்கையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவின்படி, மாணவர்களின் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு விதிகளை பின்பற்ற வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார். ஆனாலும், பெரும்பாலான தனியார் பள்ளிகள், இதை கண்டு கொள்ளாமல், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வரும் முன், பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை முடித்துவிட்டன.எனவே, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, இன்று வெளிவரும் நிலையில், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை கண்காணிக்கப்பட உள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் குழுவினர், பள்ளிகளில் திடீர் ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கை விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக