லேபிள்கள்

17.5.17

அதிக மதிப்பெண் விளம்பரம் கூடாது, பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை !!!

 சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை வைத்து விளம்பரம் செய்யக்கூடாது
என தமிழக அரசு தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
🔸 தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வு முடிவு கடந்த 12ந்தேதி வெளியானது.
🔸 இந்த ஆண்டு முதன்முறையாக தேர்வு முடிவுகள் கிரேடு முறையில் வெளியிடப்பட்டது.
🔸 இதன் காரணமாக முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது மாணவ, மாணவிகள் யார் என்பது விளம்பரப்படுத்து வது தடுக்கப்பட்டது.
🔸 மாணவ மாணவிகளிடையே ஏற்படும் வேறுபாட்டை களைவதற்காக இந்த முறை நடைமுறைப்படுத்துவதாக கூறப்பட்டது.
🔸 இந்நிலையில் ஒருசில பள்ளிகளில், தங்கள் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின் பேனர் வைத்து ஆள் பிடிக்க தொடங்கி உள்ளனர்.
🔸 பல தனியார் பள்ளிகளில்  பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
🔸 இதன் காரணமாக பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
🔸 அதில்,  10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை வைத்து விளம்பரம் செய்யக்கூடாது என்றும், விளம்பர பதாகைகளை வைப்பதற்கும் , ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கும் அரச தடை விதித்துள்ளதாகவும், மீறி பேனர்  வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
🔹 10, 12-ஆம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
🔹 2016-2017 ஆம் ஆண்டு முதல் பொது தேர்வில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறை இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணை எண்.91-ஐ கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔹மேலும் ஒரு சில மாணவர்களின் பெயர்கள், புகைப்படத்தை நாளிதழ், ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக