'இன்று வெளியாகும், 10ம் வகுப்பு தேர்வு முடிவின்போது, பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களின் பட்டியலை வெளியிடக்கூடாது' என, பள்ளிகளுக்கு, சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த வாரம் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதில், மதிப்பெண்களை அடிப்படையாக தனியார் பள்ளிகள் நடத்தும் வணிகத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில், 'மாநில, மாவட்ட அளவிலான ரேங்க் எடுக்கும் மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படக்கூடாது' என, அரசாணை வெளியிடப்பட்டது. அதே போல், மாநில மற்றும் மாவட்ட அளவில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பெயர்களும் வெளியிடப்படவில்லை. ஆனாலும், தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரங்களை வெளியிட்டு, விளம்பரம் தேடிக்கொண்டன.
சில பள்ளிகள் வேறு பள்ளியில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவியரை, தங்கள் பள்ளியில் படித்து மதிப்பெண் பெற்றதாகவும் விளம்பரம் தேடிக்கொண்டன. ஒரு சில மாணவர்களின் பெயர்களை ரேங்க் வரிசையில் தெரிவிக்கும் போது, மற்ற மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர் என்ற காரணத்துக்காகத்தான், அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், பள்ளியளவில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் போது, அதே சூழல் நீடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இன்று வெளியாகும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்களின் விபரங்களையும் வெளியிடக்கூடாது என, பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது: மாணவர்களின் நலன் கருதி, ரேங்க் பட்டியல் வெளியிட தடை விதித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி எந்த நிலையிலும் மாணவர்களின் ரேங்க் பட்டியல் வெளியிடக்கூடாது. மாநில, மாவட்ட அளவில் ரேங்க் பட்டியல வெளியிடப்படாத நிலையில், பள்ளி அளவில் ரேங்க் பட்டியல் வெளியிடுவதும் தவறு. இதனால், இன்று வெளியாகும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளியளவில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் ரேங்க் பட்டியலையும், பள்ளிகள் வெளியிடக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது. மீறி செயல்படும் பள்ளிகள் மீது, துறை ரீதியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக