லேபிள்கள்

19.5.17

மாற்று திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

அரசுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால், மாற்று திறனாளி ஆசிரியர்களின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணியிட மாறுதலில், மாற்று திறனாளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாம் இட முன்னுரிமை, ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதைக் கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் சங்கத்தினர், தலைமை செயலக முற்றுகை போராட்டத்தை நேற்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், பள்ளி கல்வித்துறை செயலர் சார்பில், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன், சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சு நடத்தினார். இதில், மாற்று திறனாளிகள் சங்கம் முன்வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டதோடு, ஓரிரு நாளில், அதற்கான அரசாணை வெளியிடப்படும் என, உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, மாற்று திறனாளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக