இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 'டாப்பர்ஸ்' பட்டியல் வெளியிடுவதை, ரத்து செய்வது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவில், ரேங்கிங் முறை ரத்தானதால், மாணவர்களுக்கு, எந்த பிரச்னை யும் ஏற்படவில்லை; பல தரப்பிலும், வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை யால், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற பிரச்னை களில் இருந்து விடுதலை கிடைத்தது. அதே நேரத்தில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை பயன்படுத்தி, வணிக நோக்கில் செயல்படும் பள்ளிகளுக்கு, இந்த நடவடிக்கை அதிர்ச்சியை அளித்துள்ளது.இதற்கிடையில், உயர் கல்வித் துறையிலும்,'டாப்பர்ஸ்' பட்டியல் வெளியிடுவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி துறை அமைச்சர்கள், செயலர்கள் தரப்பில் ஆலோசனையும் நடத்தப்பட உள்ளது.
வழக்கமாக, அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சி லிங்கில், 'கட் ஆப்' மதிப்பெண் படி, ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.அதில், முதல், 10 இடங்களை பெற்ற மாணவ, மாணவியரின் பெயர், புகைப்படம், முகவரி,மொபைல் போன் எண் போன்றவை இடம் பெறும். அவர்களிடம் பேட்டி எடுத்து வெளியிடுவது, ஊடகங்களின் வழக்கம்.
அதில், அவர்கள் படித்த பள்ளி, எதிர்கால லட்சியம், அதிக மதிப்பெண் எடுத்தது எப்படி போன்ற விஷயங் கள் இடம்பெறும். எனவே, அதையும் தடுக்கும் வகை யில், கவுன்சிலிங்கில், 'டாப்பர்ஸ்' பட்டியல் வெளி யிடுவதை நிறுத்துவது குறித்து,அரசு தரப்பில் ஆலோசிக்கப் படுகிறது. அதே நேரத்தில், மாணவர்கள் சேர்க்கையை பொறுத்தவரை, வழக்கம் போல, மதிப்பெண் அடிப்படையில், 'கட் ஆப்' நிலவரம் வெளியிடப் பட்டு, அதன்படி இடங்கள் ஒதுக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக