தமிழகத்தில், ஒன்பது கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், வரும், 31ல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டுறவு
சங்கங்களுக்கான, மாநில தேர்தல் கமிஷனர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் வரும், மூன்று சங்கங்கள்; கைத்தறி மற்றும் துணிநுால் இயக்குனர் கட்டுப்பாட்டின் கீழ் வரும், மூன்று சங்கங்கள்; மீன்வளத் துறை, பால்பண்ணை அபிவிருத்தி, தொழில் துறை கமிஷனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள, தலா, ஒரு சங்கம் என, ஒன்பது சங்கங்களுக்கு, தேர்தல் நடைபெற உள்ளது.வேட்பு மனு தாக்கல், வரும், 23ல் நடைபெறும். மறுநாள், வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 31ல், ஓட்டுப்பதிவும், ஜூன், 1ல், ஓட்டு எண்ணிக்கையும் நடைபெறும். தேர்தல் குறித்த விபரங்களை, www.coopelection.tn.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக