தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
28.04.2017 அன்று பட்டதாரி ஆசிரியர்கள்
நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியராக பதவிஉயர்வு பெறுவதற்கு தடையாணை பெற்றதை ஊடகத்தில் மூலம் நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்
கூட்டமைப்பு அறிந்து, 02.05.2017 அன்று பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையிலான ஆசிரியர் பிரதிநிதிகள் கூட்டத்தில் அனைவரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியராக பதவிஉயர்வு பெறுவதற்கு தடையாணை பெற்றதை ஊடகத்தில் மூலம் நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்
பின் 05.05.2017 அன்று அத்தடையாணை மற்றும் AFFIDAVIT நகல்கள் இரண்டினையும் பெற்று தொடக்ககல்வி இணை இயக்குனர் , பள்ளிக்கல்வி அமைச்சர் ஆகியோரிடம் வழங்கி தடையாணை நீக்க நடவடிக்கை எடுக்க செய்தோம்.
தொடக்க கல்வி இணைஇயக்குனர் அவர்களும் தடையாணை நீக்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன என்றும் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தடையாணை ரத்து செய்யப்பட்டுவிடும் என இன்று நமது மாநில பொறுப்பாளர்களிடம் தெரிவித்தார்
மேலும் தொடக்க கல்வித்துறை மாறுதல் கலந்தாய்வு எவ்வித தடையின்றி நடைபெறும் எனவும் இன்று சென்னையில் தம்மை சந்தித்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொறுப்பாளர்களிடம் இணை இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வதந்திகளை நம்ப வேண்டாம்
தொடக்க கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி, பாதுகாப்பில் என்றென்றும் முன்னின்று செயல்படும் இயக்கம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.
📌📌📌📌📌📌📌📌📌
Good!
பதிலளிநீக்கு