புதிய பாடத்திட்ட கமிட்டியின் முதல் கூட்டம், வரும், 17ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள், 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளன.
அதேபோல், ஒன்றாம் வகுப்பு முதல், 10 வகுப்பு வரையிலான பாடங்களும், ஆறு ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. எனவே, புதிய பாடத்திட்டத்தை உருவாக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அந்த பொறுப்பு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளியிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாடத் திட்டத்துக்கான உயர்மட்ட ஆலோசனை குழு உருவாக்கப்பட்டு உள்ளது. இதில், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், முன்னாள் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், 17ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. இதில், தமிழக பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும்; எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும்; என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக