அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10 ம் வகுப்பு முதல், பிளஸ் ௨ வரை படிக்கும் மாணவர்கள், விளையாட்டு பயிற்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், பள்ளிக்கல்வியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த வரிசையில், பள்ளி அளவிலான மாநில விளையாட்டு போட்டிகளை, ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.இதனால், பள்ளிகள் திறந்ததும், ஜூன் இரண்டாவது வாரம் முதல், பள்ளி, வட்ட அளவில், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அரசு ஒதுக்கிய, 10 கோடி ரூபாயில், இன்னும் உபகரணங்கள் வாங்கவில்லை; பயிற்சியும் அளிக்கவில்லை.
விதிமுறைப்படி, ஒரு குழுவில், 11 பேர் இருக்க வேண்டும்; மாணவர் சேர்க்கை முடியும் முன், ஏழு பேர் குழு அமைக்கப்பட்டு, போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், மாநில மற்றும் தேசிய போட்டிகளில் தகுதி பெற முடியாது; உயர்கல்வியில் விளையாட்டு ஒதுக்கீட்டில், மாணவர்கள் சேர்வதும் சிக்கலாகும்.இந்நிலையில், பொதுத் தேர்வு நடத்தப்படும், ௧௦ம் வகுப்பு, பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨ மாணவர்களுக்கு, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவும், பயிற்சி பெறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மூலம், வாய்மொழியாக உத்தரவிடப்பட்டு, பொதுத் தேர்வு மாணவர்கள் விளையாட செல்வது தடுக்கப்பட்டு உள்ளது.போட்டியை நடத்த திட்டமிட்டுள்ள, பள்ளிக்கல்வித் துறை மீது, மாணவர்களும், உடற்கல்வி ஆசிரியர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக