கேந்திரிய வித்யாலயாபள்ளிகள் போல், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக, தனி பள்ளிகள் திறக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க, பார்லிமென்ட் விவகாரத்துறை முன்னாள் செயலர்,
அப்சல் அமானுல்லா தலைமையில், குழு ஒன்றை, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் அமைத்தது.ஆலோசனை இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த தாவது: சிறுபான்மையினர்கள், குறிப்பாக முஸ்லிம்கள், கல்வியிலும், திறன் வளர்ச்சியிலும் மிகவும் பின்தங்கியுள்ளனர். 2011ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, எழுத்தறிவில், முஸ்லிம்களின் நிலை, 68.53 சதவீதமாக உள்ளது. அதனால், முஸ்லிம்களிடம் கல்வி வளர்ச்சி ஏற்பட, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் போல், சிறுபான்மையினர், பழங்குடியினருக்கு என, தனிப்பள்ளிகள் துவக்கப்படவேண்டும். அதில், சி.பி.எஸ்.இ., அல்லது என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டங்களை பின்பற்றலாம். அத்துடன், மதரசாக்களுக்கு சென்று, மதப்பாடங்களை கற்கவும் அனுமதிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இது தொடர்பாக, என்.சி.இ.ஆர்.டி., கவுன்சில் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துடன், சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. இதில் சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினருக்கு என, தனிப்பள்ளிகள் துவக்க முடிவு செய்யப்பட்டது.இது பற்றி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகஅதிகாரி ஒருவர் கூறியதாவது:சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், இந்த பள்ளிகள் திறக்கப்படும்.
கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில், மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.குழு அமைப்பு : அதேபோல், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினருக்காக துவங்கப்படும் பள்ளிகளில், அந்த சமூகத்தினரின் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சி.பி.எஸ்.இ., அல்லது என்.சி.இ.ஆர்.டி., கல்வி முறை பின்பற்றப்படும். இந்த பள்ளிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க, சிறுபான்மை மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சக செயலர்கள் இடம் பெற்றுள்ள குழுவையும்,மனிதவள மேம்பாட்டுத்துறைஅமைச்சகம் அமைத்துஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக