தலைமை ஆசிரியை திட்டியதால் வகுப்பறைக்குள் ஆசிரியை தற்கொலை முயற்சி
சின்னசேலம் அருகே வகுப்பறையில் ஆசிரியை தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஏர்வாய்பட்டிணம் காட்டுக் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சித்திரை செல்வன், இவரது மனைவி மங்கை (வயது 38). இவர் சின்னசேலம் அருகே உள்ள கடத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக புஷ்பதெரஸ் உள்ளார்.
கடந்த சில நாட்களாக தலைமை ஆசிரியை புஷ்பதெரஸ், ஆசிரியை மங்கைக்கு அதிக பணி கொடுத்து டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரை திட்டியதாகவும் தெரிகிறது. ஆசிரியை மங்கை இது தொடர்பாக கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் ஆசிரியை மங்கைக்கு தலைமை ஆசிரியை மேலும் கூடுதல் பணிச்சுமை கொடுத்துவந்தார். இதனால் ஆசிரியை மங்கை மனவேதனையில் இருந்துவந்தார். நேற்று வழக்கம்போல் அவர் பள்ளிக்குவந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். மாலையில் பள்ளி முடிந்தவுடன் மாணவர்கள் வீட்டுக்கு திரும்பினர்.
அப்போது வகுப்பறையில் தனியாக இருந்த ஆசிரியை மங்கை திடீர்என்று தூக்கமாத்திரையை சாப்பிட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். நீன்டநேரமாகியும் வகுப்பறையில் இருந்து மங்கை வெளியேவராததால் சந்தேகம் அடைந்த மற்ற ஆசிரியைகள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு மங்கை மயங்கி கிடந்தார். அருகில் தூக்கமாத்திரை பாட்டில் ஒன்று கிடந்தது. மேலும் அங்குள்ள கரும்பலகையில், எனது தற்கொலைக்கு காரணம் தலைமை ஆசிரியைதான் என்று ஆசிரியை மங்கை எழுதியிருந்தார். இதைப்பார்த்த ஆசிரியைகள் அதிர்ச்சியடைந்தனர்.
மயங்கி கிடந்த மங்கையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சின்ன சேலம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மங்கையிடம்சென்று விசாரணை நடத்தினர். மேலும் உதவி தொடக் கல்வி அலுவலர் சாந்தப்பன் மருத்துவமனைக்கு சென்று ஆசிரியை மங்கையிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
வகுப்பறையில் ஆசிரியை தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக