'தமிழகத்தில், 67 அரசு பள்ளிகளில், தொழிற்கல்வி வகுப்புகளை தாமதமின்றி துவக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறைக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாக மாற்ற, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், மத்திய அரசு, ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வருகிறது. 2016 - 17ல், செயல்திறன் மற்றும் புதிய ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து, தமிழக பள்ளிக்கல்வித் துறை, மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது. அதை ஆய்வு செய்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள், பல்வேறு குறைபாடுகளை கண்டறிந்து, அவற்றை களைய உத்தரவிட்டு உள்ளனர்.அதன்படி, நாடு முழுவதும் தொழிற்கல்வி வகுப்புகளை அதிகம் துவங்கவும், தொழிற்கல்வியை கட்டாய பாடம் ஆக்கவும், மாநில அரசுகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழகத்திலும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை துவங்க வேண்டும் என, ஐந்தாண்டுகளுக்கு முன் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இன்னும் அரசு பள்ளிகளில், புதிதாக தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் துவங்கப்படவில்லை.
எனவே, ௬௭ அரசு பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் துவங்கி, அதற்கான மாணவர் சேர்க்கையை நடத்த, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
'தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காகும் செலவை, மத்திய அரசிடம் பெற்று கொள்ளலாம். ஐந்தாண்டு காலத்தை போல், இனியும் கால தாமதம் செய்யக்கூடாது' எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக