அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரியும், ஆசிரியர்களின் மிரட்டல்களை கண்டித்தும், போராட்டம் நடத்தப்
போவதாக, பள்ளிக்கல்வி நிர்வாக அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர். பள்ளிக்கல்வித் துறையின் பல்வேறு அலுவலகங்களில், அமைச்சு பணியாளர்கள், நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு, பல்வேறு நிலைகளில் தரப்படும் பதவி உயர்வு, சில ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.
பள்ளிக்கல்வி நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பள்ளிக்கல்வியில் ஆசிரியர்களின் சம்பளம், நியமனம், அதற்கான விதிகளை பின்பற்றுதல், கோப்பு தயாரித்தல், நீதிமன்ற வழக்குகளுக்கு பதில் தயாரித்தல், பள்ளிகளின் நிர்வாகப் பணிகளை கவனித்தல், நலத்திட்ட உதவிகள் வினியோக கணக்கு பராமரித்தல் என, பல பணிகளை பார்க்கிறோம். ஆனால், பல மாவட்டங் களில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் எங்களை மிரட்டி, அவர்களுக்கு சாதகமாக பணியாற்ற அழுத்தம் தருகின்றனர். இது தொடர்பாக, சில இடங்களில் போராட்டம் நடத்தியும், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.பதவி உயர்வு கோப்புகளை, பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டுஉள்ளதால், காலியிடங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் அலுவலகம் வந்து, நள்ளிரவு வரை பணியாற்ற வேண்டியுள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 28ல், போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக