லேபிள்கள்

14.7.17

இன்ஜினியரிங் கல்வி கட்டணம் உயர்ந்தது!

தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டணத்தை மாற்ற, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளாக கட்டணம் மாற்றப்படவில்லை. எனவே, இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்த, நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, சராசரியாக, ௧௦ ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, ௫௦ ஆயிரம் ரூபாய்; தேசிய தர அமைப்பான, என்.பி.ஏ., அங்கீகாரம் பெற்ற பாடங்களுக்கு, ௫௫ ஆயிரம் ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சுயநிதி கல்லுாரி இடங்களுக்கு, ௭௦ ஆயிரம் ரூபாயிலிருந்து, ௮௫ ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே, புதிய கட்டணம் அமலாகும். பழைய மாணவர்களுக்கு, ஏற்கனவே உள்ள கட்டணமே பொருந்தும். இந்த தகவலை, உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக