''அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு, இடைக்கால நிவாரணமாக, மாதம், 1,200 ரூபாய் வழங்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார்.
இதையடுத்து, வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக, தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான, 13வது ஊதிய ஒப்பந்த பேச்சு, சென்னை, குரோம்பேட்டை மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி நிலையத்தில், நேற்று நடந்தது.
இதில், போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், செயலர், டேவிதார், நிதித்துறை கூடுதல் செயலர், ஆனந்தகுமார், பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். பேச்சின் போது, இடைக்கால நிவாரணமாக, ஊழியர்களுக்கு, மாதம், 1,200 ரூபாய் வழங்குவதாக, அரசு ஒப்புதல் அளித்தது.
இது குறித்து, அமைச்சர், எம்.ஆர்.விஜய பாஸ்கர் கூறியதாவது:
'போக்குவரத்துக் கழகங்களில், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, பிரச்னைகளை பேசி தீர்க்க வேண்டும்' என, தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.அவை குறித்த வழக்கு, நீதிமன்றத்தில் உள்ளது.
அடுத்த மாதம், 9ம் தேதி, நீதிமன்றத்தில், அனைத்து கோரிக்கைகளுக்கும் பதில் அளிக்க உள்ளோம்.ஏற்கனவே, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சின்படி, 1,200 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, பல பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
தற்போது, ஊதிய ஒப்பந்தம் தாமதமாவதால், ஊழியர்களுக்கு, இடைக்கால நிவாரணமாக, மாதம், 1,200 ரூபாய் வழங்கப்படும். அதற்காக, 15 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
அடுத்தகட்ட பேச்சு, டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கும். அதில், நிலுவை, ஊதிய ஒப்பந்தம் என, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
தொழிற்சங்க கூட்டுக் குழு நிர்வாகிகள் கூறியதாவது:
போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை வழங்குவது, ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட நிதியை வழங்குவது, மூல நிதி ஆதாரத்தை பெருக்குவது உள்ளிட்டவற்றிற்கான விளக்கத்தை, அமைச்சரிடம் கேட்டோம்.
நீதிமன்றத்தில் பதில் அளிப்பதாகவும், ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவதாகவும் தெரிவித்து, வேலைநிறுத்தத்தை கைவிடுமாறு வேண்டினார்.
வரும் பண்டிகை நாட்களை கருத்தில் கொண்டு, பொது மக்களுக்கு உதவும் வகையில், தற்காலிகமாக, வேலைநிறுத்தத்தை ஒத்தி வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக