லேபிள்கள்

29.9.17

சித்தா, ஆயுர்வேத படிப்பு கவுன்சிலிங் எப்போது?

'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், அக்., இரண்டாம் வாரத்தில் துவங்கும்' என, இந்திய முறை மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இதில், 396 இடங்கள்; 22 சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 859 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, 6,938 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஒரு மாதம் ஆகும் நிலையில், மாணவர் சேர்க்கை எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, மாணவர் சேர்க்கை அதிகாரிகள் கூறுகையில், 'விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதி பட்டியலும் தயராக உள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும், அக்., இரண்டாம் வாரத்தில், கவுன்சிலிங் நடத்தப்படும்' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக