விஜயதசமி பண்டிகையையொட்டி, எல்.கே.ஜி., படிப்பில் சேரும் மாணவர்களில் தகுதியானவர்களுக்கு, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.
ஆண்டு தோறும், விஜயதசமி பண்டிகை நாளில், குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியை சம்பிரதாயமாக துவங்குவது வழக்கம்.
இதற்காக, தனியார் பள்ளிகளில், மழலையர் வகுப்பு முதல், யு.கே.ஜி., வரை, அட்மிஷன் வழங்கப்படுகிறது. பல தனியார் பள்ளிகளில், பிளே ஸ்கூல்கள் மற்றும் நர்சரி பள்ளிகளில், சிறப்பு அட்மிஷன் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு, நாளை விஜயதசமி பண்டிகை வருகிறது. இன்று சேரும் குழந்தைகளில், அரசின் விதிகளின் படி வருமானம் பெறும், தகுதியான பெற்றோரின் குழந்தைகளுக்கு, கட்டாய கல்வி சட்டத்தில், இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.
பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர், கட்டாய கல்வி சட்ட சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற, இணைய
தளத்தில், பதிவு செய்யலாம்.
கூடுதல் தகவல்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்களில் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக