மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றக்கோரி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வி.பி.ஆர்.மேனன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:-
நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் 23 இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களும் (ஐ.ஐ.டி.), 31 தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களும் (என்.ஐ.டி.), 7 இந்திய அறிவியல் மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களும் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.) செயல்பட்டு வருகின்றன.
இந்த உயர் கல்வி நிறுவனங்களில், 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு வெளிப்படையான முறையில் தேர்வு நடத்தப்படுவதில்லை. இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதில்லை.
ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதியை நிர்ணயிப்பதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. ஓய்வு பெற்ற பேராசிரியர்களை நியமிக்கும் இந்த கல்வி நிறுவனங்கள், உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பான 35 வயதை தளர்த்துவது இல்லை.
இந்த கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றும் வகையில் கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவைகளை மாற்றியமைக்க நிபுணர் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவன இயக்குனர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
பின்னர், விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 13-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக