லேபிள்கள்

24.9.17

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!

'இந்த கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' கிடைப்பது சிரமம்' என, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு, 2011 முதல், லேப் - டாப்களை, அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இதுவரை, 40 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. 2016 - 17 கல்வியாண்டில், லேப் - டாப் கொள்முதலுக்கு, 'டெண்டர்' விடுவதில் பிரச்னை ஏற்பட்டதால், கடந்த ஆண்டு மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது, இந்த கல்வியாண்டிலும், அதே நிலைமை ஏற்பட்டுள்ளது.


இது குறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது:கடந்த கல்வியாண்டுக்கான லேப் - டாப்கள், இப்போது தான் வர துவங்கியுள்ளன. அவற்றை கொடுத்து முடிப்பதற்கே, பல மாதம் ஆகிவிடும். வழக்கமாக, லேப் - டாப் கொள்முதல் செய்வதற்கு முன், தகவல் தொழில்நுட்ப துறையில், அது தொடர்பாக அரசாணை 
வெளியிடப்படும். அதன்பின், பல மாதங்கள் கழித்து, கொள்முதல் துவங்கும். இந்த ஆண்டுக்கான அரசாணை, இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால், இந்த கல்வியாண்டில் பயிலும் மாணவர்களும், காத்திருக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.'லேப் - டாப்' கொள்முதல் செய்யும் பொறுப்பு, 'எல்காட்' எனும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தை சேர்ந்தது. அதன் மேலாண் இயக்குனர், சுடலைக்
கண்ணனிடம், இது பற்றி கேட்டதற்கு பதிலளிக்க மறுத்து விட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக