2010-ம் ஆண்டு வரை கல்லூரியில் சேர்ந்து பொறியியல் பட்டம் பெறாதவர்களுக்கு தேர்வு எழுத கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறி உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘தூய்மையே சேவை’ இயக்கம் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘தூய்மையே சேவை’ இயக்கம் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
40 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்
பொறியியல் படிப்பை 7 ஆண்டுகளுக்குள் தேர்வு எழுதி முடிக்க வேண்டும் என்பது வரைமுறை. ஆனால், அதற்குள் முடிக்காத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் ஏராளமானோர் முதல்-அமைச்சர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை அளித்து வந்தனர். அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கு ஓர் ஆண்டு காலம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, 2018 பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் அவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று கொள்ள வேண்டும். அதற்கு எப்போது விண்ணப்பிப்பது, தேர்வு கட்டணம் என்ன என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இதன் மூலம் சுமார் 40 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள். ஆனால், இது போன்ற வாய்ப்பு மீண்டும் அளிக்கப்பட மாட்டாது. எனவே 2011-க்கு பிறகு சேர்ந்தவர்கள் தங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணி விடாமல் உரிய காலகட்டத்தில் தேர்வை எழுதி பட்டம் பெற்றுவிட வேண்டும்.
மாணவர்கள் தயார்படுத்தப்படுவார்கள்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியை தாக்கப்பட்டது எதிர்பாராத நிகழ்வு. எனினும், இதுபோன்ற செயல்கள் மேலும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு தேவை இல்லை என்பது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கருத்து. அதனால், நாமும் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்த்து வருகிறோம். தற்போது, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு அதிகமான இடங்கள் உள்ள நிலையில் நீட் தேர்வு தேவையில்லை.
எனினும், மத்திய அரசு நீட் தேர்வு கட்டாயம் என்று கொண்டு வரும்பட்சத்தில், நீட் தேர்வை எதிர் கொள்ளும் வகையில் மாணவர்களை தயார்படுத்த வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக