மும்பையில் பிரமாண்டமான போராட்டம் நடத்திய விவசாயிகளின் கோரிக்கைகளை, மஹாராஷ்டிரா அரசு ஏற்றதை அடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.மஹாராஷ்டிராவில்,
முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.விவசாய கடன் தள்ளுபடி, காடுகளில் உள்ள நிலங்களை, பழங்குடி இன விவசாயிகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மஹாராஷ்டிர மாநில விவசாயிகள், மும்பையை நோக்கி பேரணி நடத்தினர்.ஆயிரக்கணக்கான விவசாயிகள், நடைப் பயணமாக, நேற்று அதிகாலை மும்பை நகருக்குள் நுழைந்தனர். இதனால் நகரமே ஸ்தம்பித்தது. மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில், விவசாயிகள், நேற்று காலை திரண்டனர். அங்கிருந்து புறப்பட்டு, தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த, அவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.பள்ளி மாணவர்களுக்கான பொது தேர்வு நடப்பதால், மாணவர்கள் தேர்வுக்கு செல்வது பாதிக்கப்படாமல் இருக்க, விவசாயிகள், தங்கள் முற்றுகை போராட்டத்தை, காலை, 11:00 மணிக்கு மேல் தள்ளி வைத்தனர்.இந்நிலையில், விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து, முதல்வர் தலைமையிலான அமைச்சர்கள் குழு, நேற்று பேச்சு நடத்தியது. முடிவில், விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படுவதாக, எழுத்துப்பூர்வமாக, முதல்வர் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக, விவசாய சங்கம் அறிவித்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக