லேபிள்கள்

13.3.18

முற்றுகை போராட்டம் : பஸ் ஊழியர்கள் முடிவு

வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற, பஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்வதால், வரும், 20ல், போக்குவரத்து கழக தலைமை அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்த, தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறியதாவது: ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்; ஓய்வு பெற்றோருக்கான பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பது உட்பட, 21 கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுக்கும், தொழிலாளர் நல கமிஷனருக்கும் முறைப்படி, 'நோட்டீஸ்' வழங்கினோம். உரிய நடவடிக்கை எடுக்காததால், ஜன., 4 முதல், 11 வரை, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். அதைத் தொடர்ந்து, பணப்பலன்கள் வழங்கப்பட்டன.ஊதிய ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து, உயர் நீதிமன்றம் நியமித்த, மத்தியஸ்தரிடம் தெரிவித்துள்ளோம். வேலை நிறுத்தத்தை ஒருங்கிணைத்த, 50க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு, இதுவரை பணி தரப்படவில்லை. பலருக்கு, தொலைதுார இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை திரும்ப பெறாவிட்டால், வரும், 20ம் தேதி, போக்குவரத்து கழக தலைமை அலுவலகங்களை, முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக