லேபிள்கள்

17.3.18

தமிழ் முதல் தாள் தேர்வு மகிழ்ச்சியும், சோதனையும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கருத்து

'பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு மகிழ்ச்சியும், சோதனையும் தந்தது என மாணவர்களும்; இதுவரை கேட்கப்படாத பகுதியில் இருந்தும், சிந்தித்து விடை எழுதும் வகையிலும் வினாக்கள் இடம் பெற்றதால் மெல்ல கற்கும் மாணவர் தேர்ச்சி பாதிக்கும்,' என ஆசிரியர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரையில் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:
பார்த்தசாரதி, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி: எதிர்பார்த்தவையாக இருந்தாலும் சிந்தித்து எழுதும் வகையில் வினாக்கள் இருந்தன. பாடங்களை முழுவதும் படித்திருந்தால் மட்டுமே அனைத்து வினாக்களையும் எழுதும் வகையில் கேட்கப்பட்டன. ஒரு மதிப்பெண் பகுதியில் 3 வினாக்கள்அதுபோல் இடம் பெற்றன. இரண்டு மதிப்பெண் பகுதியும் இதுபோல் தான் இருந்தன. நெடுவினாக்கள் எளிதாக இருந்தன. படித்த விடையை வினாவிற்கு ஏற்ப எழுதும் திறனை சோதிக்கும் வகையில் இருந்தது.கிருபாஸ்ரீ, எம்.ஏ.வி.எம்.எம்., பள்ளி: பெரும்பாலும் எதிர்பார்த்த வினாக்கள் கேட்கப்பட்டன. உரைநடை பகுதியில் 'புளு பிரின்ட்' அடிப்படையில் இருந்தன. இரண்டு மதிப்பெண் வினா பகுதி அனைத்தும் நேரடியாக கேட்கப்பட்டிருந்தன. செய்யுள் பகுதியில் இடம் பெற்ற 55 மதிப்பெண்ணிற்கான வினாக்களும் எளிதாக இருந்தன. உரிய விடை எழுதுக பகுதியில் ஒரு வினா சிந்தித்து எழுதும் வகையில் இருந்தது.வசந்தகுமார், வண்டியூர் அரசு உயர்நிலை பள்ளி: ஒரு மதிப்பெண் பகுதியில் இடம் பெற்ற 6 வினாக்களில் நான்கு மட்டுமே எழுத முடிந்தது. இரண்டு மற்றும் நான்கு மதிப்பெண் பகுதி எளிதாக இருந்தன. மனப்பாடம் பகுதியில் அனைவரும் எதிர்பார்த்த திருக்குறள் கேட்கப்பட்டது. நெடுவினா பகுதியும் எளிதாக இருந்தது. இதுதவிர 'புக்பேக்'கில் இல்லாமல் பாடங்களின் உள்பகுதியில் இருந்தும் சில வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.திலகவதி, அண்ணாநகர் கந்தசாமி கொத்தனார் உயர்நிலை பள்ளி: பல வினாக்கள் இதுவரை கேட்காத பகுதியில் இருந்து இடம் பெற்றன. 'புக்பேக்'கில் இல்லை. ஆனால் பாடத்திற்குள் பகுதியில் உள்ளன. மனப்பாடம் பகுதி மற்றும் நெடுவினா பகுதிகள் எளிதாக இருந்தன. கோடிட்ட பகுதியில் இடம் பெற்ற ஒரு வினா சிந்தித்து விடை அளிக்கும்படி இருந்தது.அய்யம்மாள், தமிழாசிரியை, அரசு உயர்நிலை பள்ளி, வன்னிவேலம்பட்டி:நன்றாக படிக்கும் மாணவர்களும் சென்டம் பெற முடியாத அளவிற்கு வினா அமைப்பு இருந்தன. செய்யுளில் 55ம், உரைநடையில் 45 மதிப்பெண்ணுக்கும் வினாக்கள் இடம் பெற்றன. இதில் 14 மதிப்பெண்களுக்கு இதுவரை ஆண்டு தேர்வுகளில் இடம் பெறாத பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. முதல் இடைப்பருவத் தேர்வு முதல் மூன்றாம் இடைப்பருவ தேர்வு வினாத்தாள்களிலும் இப்பகுதி வினாக்கள் கேட்கப்படவில்லை. நெடுவினா பகுதி எளிமையாக இருந்தது. நன்றாக படிக்கும் மாணவர்கள் குறித்து பிரச்னை இல்லை. ஆனால் மெல்லக்கற்கும் (ஸ்லோ லேர்னர்ஸ்) மாணவர்களுக்கு சோதனையாக இருக்கும். அவர்களின் தேர்ச்சி பாதிக்கும் வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக