லேபிள்கள்

25.5.18

'குரூப் - 2' தேர்வர்களுக்கு வரும், 29ல் கவுன்சிலிங்

'குரூப் - 2' தேர்வில், 48 இடங்களுக்கு, வரும், 29ல், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் செயலர், நந்தகுமார்
வெளியிட்ட செய்திக்குறிப்பு: 'குரூப் - 2' நேர்முகத் தேர்வு உள்ள பதவிகளுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், முதன்மை எழுத்து தேர்வு, 2017 ஆகஸ்ட், 21ல் நடந்தது. இதற்கான நேர்காணல், இரண்டு கட்டங்களாக, ஏப்., 25 வரை நடந்தது. மீதம் உள்ள, 48 பணியிடங்களை நிரப்ப, மூன்றாம் கட்ட கவுன்சிலிங், வரும், 29ல், நடக்க உள்ளது. 

இதில், 1:5 என்ற விகிதத்தில், தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பதிவெண்கள், தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ்., மற்றும், இ - மெயில் வழியாகவும், அழைப்பு தகவல், விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழைப்பு கடிதத்தை, தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் மற்றும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்றவர்கள், மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக