சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, 12ம் வகுப்பு தேர்வுகள், ஏப்ரலில் நடந்தன. இந்த தேர்வுகளின் முடிவுகள், வரும், 28ல்,
வெளியாகும் என, கூறப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக, இன்றே வெளியாகின்றன.இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக செயலர், அனில் ஸ்வரூப் தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு இன்று வெளியாகும்' என, குறிப்பிட்டுள்ளார். பின், நேற்றிரவு, சி.பி.எஸ்.இ., தரப்பில் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.அதில், கூறப்பட்டுள்ளதாவது:சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. அதைத்தொடர்ந்து, ஜூன், 9 வரை, தேர்வு முடிவுக்கு பிந்தைய, கவுன்சிலிங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, 21ம் ஆண்டாக, இந்த கவுன்சிலிங்கை, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.இதற்காக, 1800 11 8004 என்ற, தொலைபேசி எண்ணில், அனுபவம் பெற்ற உளவியலாளர்கள் கவுன்சிலிங் வழங்குகின்றனர். தேர்வு முடிவு விபரங்களை, www.cbse.nic.in மற்றும்www.cbseresults.nic.inஎன்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக