ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள, ஒரு நபர் கமிட்டி,
அரசு ஊழியர் சங்கங்களுக்கு, அழைப்பு விடுத்துள்ளது.ஏழாவது ஊதியக்குழு
பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
ஊதிய உயர்வில், முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை களைய,
நிதித்துறை செலவின செயலர், சித்திக் தலைமையில், ஒரு நபர் கமிட்டி
அமைக்கப்பட்டுள்ளது.'அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து,
தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்கும்.
கமிட்டி கேட்கும் அனைத்து தகவல்களையும், துறைத் தலைவர்கள்
தெரிவிக்க வேண்டும்' என, நிதித்துறை செயலர் சண்முகம்
உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், ஒரு நபர் கமிட்டி, வரும், 28ம் தேதி
முதல், அரசு ஊழியர் சங்கங்களை அழைத்து, கருத்து கேட்க முடிவு
செய்துள்ளது. சென்னை, தலைமை செயலகத்தில், இரண்டாவது தளத்தில்
உள்ள, கமிட்டி அலுவலகத்திற்கு, வரும், 28 காலை, 11:00 மணிக்கு வரும்படி,
தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கத்திற்கு, முதலில் அழைப்பு
அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக