லேபிள்கள்

22.5.18

கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது: அமைச்சர்

திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் வெப்பம் நிலவி வருகிறது. பிற மாவட்டங்களில் மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது. புதிய பாடத்திட்டத்தின்படி பாடங்களை மாணவர்கள் கற்க வேண்டும் என்பதால், கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது. திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக