லேபிள்கள்

26.5.18

'நீட்' விடைக்குறிப்பு வெளியீடு மாணவர்களே மார்க்கை கணக்கிடலாம்

நீட்' தேர்வுக்கான விடைக்குறிப்பு மற்றும் மாணவர்களின் விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அலோபதி, இயற்கை மருத்துவம் மற்றும் பல்
மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வு தரவரிசையின் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 6ல் நடந்தது. இதில் 13 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் நேற்று சி.பி.எஸ்.இ.,யின் நீட் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மாணவர்கள் தங்கள் வினாத்தாள் வகைக்கான விடைக்குறிப்பு மற்றும் விடைத்தாள்களில் அளித்த பதில்களின் நகலை https://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்த விடைக்குறிப்பை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை தாங்களே கணக்கிட்டு கொள்ளலாம். விடைகள் தவறாக இருந்தால் சரியான பதிலுக்கான ஆதாரங்களுடன் சி.பி.எஸ்.இ.,க்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.விடைக்குறிப்புகளையும், விடைத்தாள்களையும் நாளை மாலை 5:00 மணி வரை மட்டுமே ஆன்லைனில் பார்க்க முடியும்; அதன்பின் தேர்வர்களால் பார்க்க முடியாது என சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக